“திமுக அழைப்பு விடுத்தால் ஆலோசிப்போம்” - ஓ.பன்னீர்செல்வம்


அழைப்பு விடுத்தால் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அமித்ஷா நலம் விசாரித்து சென்றார். 

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று‌ அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை மு‌தலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலை‌யத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS