கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா


மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அமித்ஷா நலம் விசாரித்து சென்றார். 

Read Also -> முக்கொம்பு அணையை முன்கூட்டியே சீரமைக்க தவறியது ஏன்?: மு.க.ஸ்டாலின் 

Read Also -> புறா பிடிக்க மாடியில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம் 

கடந்த 16ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து டெல்லி சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பரஸ்பரம் கலந்துகொள்வது அரசியல் நாகரீகம் என்பதை தாண்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முரசொலி பவளவிழா மற்றும் காவரி பிரச்னை தொடர்பாக திமுக நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பாஜக அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திமுக அழைப்பு விடுத்ததும் அதனை ஏற்றுக்கொண்டு நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க இருப்பதும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS