“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்


மதுரை திருப்பரங்குன்றத்தில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், துரோகிகள் ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்ததை போல இழப்பார்கள் என டி.டிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அம்மா மக்கள் முன்னேறக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது “திருப்பரங்குன்றத்தில் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், துரோகிகள் ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்ததை போல இழப்பார்கள். அது ஜெயலலிதாவின் கோட்டை. திமுகவில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிச்சனை அது பற்றி பேசுவது நாகரிகமாக இருக்காது. அடுத்தாண்டு அம்மாவின் ஆட்சி அமைத்தவுடன், நீர்நிலைகள் மேம்படுத்தப்படும், நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும்” என்றார் . 


Read Also ->  “டிடிவி தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

மேலும் கருணாநிதி முதல்வராக இருப்பதற்கு,எம்.ஜி.ஆர் தான் காரணம். தூரோகம் செய்து அவரை நீக்கியப் பிறகே தான் அதிமுக தோன்றியது. கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்காவிடில், நானே இறங்கி போராடி இருப்பேன் என்பவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் போராட்டம் கூடாது என்றார். அவர் பேசியதை அவருக்கே அன்றும், இன்றும் தொலைக்காட்சிகள் போட்டு காண்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS