ஆக. 20ல் அதிமுக செயற்குழுக் கூட்டம் 


ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறும் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும். கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

                 

POST COMMENTS VIEW COMMENTS