“நான் உடைக்கமாட்டேன்; திமுக தானாக உடையும்” அழகிரி பேச்சு


திமுக தலைவர் மறைந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை. ஆனால், திமுகவின் தற்போதையை நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி பேசியுள்ள கருத்துக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. திமுகவில் தனக்கான இடம் என்பது குறித்து மட்டும் அழகிரி பேசியிருந்தால் கூட அது சிறிய சர்ச்சையாக முடிந்திருக்கும். ஆனால், திமுகவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலை போகிறார்கள் என்னும் அளவிற்கு காட்டமாக அவர் பேசியுள்ளார்.

ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் அதிருப்தியில் உள்ளதை ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறேன். கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. கட்சியை நான் உடைக்க வேண்டியதில்லை. அது தானாக உடையும்.

நான் பொறுப்புக்கு வருவதையே கருணாநிதியின் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஸ்டாலின் தற்போது செயல்படாத தலைவராகவே இருக்கிறார். தற்போதையை திமுக தலைமை சரியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டு இருந்தால் எப்படி ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்திருக்க முடியும்?” என்று கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS