இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான் 


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியானது. 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் பதவி வகித்த திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானது. 

இதனையடுத்து, திரூவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமுமுக இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

இந்நிலையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

POST COMMENTS VIEW COMMENTS