ஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..!


திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கருணாநிதி மறைவை தொடர்ந்து கட்சி ரீதியாக அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS