புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக சவால் 


முதுகெலும்பு உள்ள புதுச்சேரி அரசாக இருந்தால் ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம், அதை அதிமுக ஆதரிக்க தயார் என அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர் அன்பழகன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் மாண்பு மற்றும் மரியாதைகளை மறந்து தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவதால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இல்லாத விதத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்பும் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரி அரசு இயந்திரத்தை முடக்கி வரும் ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இருவருக்குள் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் தேவையான நிதி இருந்தும் அரசு ஊழியர்களுக்கு ஜுலை மாதம் சம்பளம் தற்போது போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

                                  

நிதி மசோதா தாமதத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பணிகள் செய்யமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அன்பழகன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லைகொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார். 31-ம் தேதிக்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே  கவர்னர் மீது தவறு இருந்தால் யயஇந்த கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். பின்னர் இந்த அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும் என்ற அன்பழகன் முதுகெலும்பு உள்ள அரசாக இருந்தால் ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம். நாங்கள் அதை ஆதரிக்க தாயர் என்றார் அன்பழகன் 

POST COMMENTS VIEW COMMENTS