கருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் - காவேரி அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என காவேரி மருத்துவமனை அறிக்கை.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்தது, மேலும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஸ்டாலின், அழகிரி, கனிமொவி, தமிழரசு காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது அதில் "திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு கருணாநிதியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS