கருணாநிதி விரைவில் குணமடைய விரும்புகிறேன் : ராம்நாத் கோவிந்த்  


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய விரும்புகிறேன் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "திரு. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை தொலைபேசியில் பேசுகையில் அவரது உடல்நிலை குறித்து பேசினேன்;திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS