40 லட்சியம், 37 நிச்சயம் - டிடிவி தினகரன்


ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக துணைப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் அந்த கட்சியின் கொள்கைகளுக்கும் தங்கள் கட்சியின் கொள்கைகளுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அமமுக வெற்றி பெறும் என கூறிய தினகரன் 40 லட்சியம், 37 நிச்சயம் என்றார். மேலும் ஏர் ஆம்புலன்ஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனே விளக்கமளிக்க வேண்டுமென தெரிவித்தார். 

POST COMMENTS VIEW COMMENTS