காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி - ஆனால் ஒரு நிபந்தனை..!


மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் தங்களது கூட்டணி பலத்தை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சித்து வருகிறது. மாநிலம் வாரியாக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், பாஜக மாபெரும் வெற்றி பெற, காங்கிரஸ், பாகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்தது.

            

இதனையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இந்தக் கட்சிகளின் கூட்டால் பாஜக படுதோல்வி அடைந்தது. சமாஜ் வெற்றிவாகை சூடியது. இதனையடுத்து, அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று பேச்சுகள் அடிபட்டன. அதனை உறுதிசெய்யும் வகையில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் சோனியா காந்தியுடன், மாயாவதி நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. 

      

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து மாயாவதி பேசியுள்ளார். அவர் கூறுகையில், “போதுமான தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும்” என்றார். மேலும், “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS