டெல்லியில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் - நிர்மலா சீதாராமனுடன் நாளை சந்திப்பு


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஓபிஎஸூக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்.பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

         

டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ்-க்கு வேறு எந்த நிகழ்ச்சியும் திட்டமிடப்படவில்லை. நிர்மலா சீதாராமனை மட்டும் நாளை மதியம் 2.45 மணியளவில் சந்திக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு படையெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS