ஒடுக்கப்பட்டோருக்காக உழைக்க வேண்டும் -ராகுல் காந்தி


ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

                     

இதைத் தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.பிக்கள் எப்படிச் செயல்பட வேண்டும், முக்கிய விவகாரங்களில் எத்தகைய நிலைப்பாடு எடுப்பது போன்றவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS