பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்?: தமிழிசை விளக்கம்


தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால்தான் மக்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்துள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமண் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையற்றது எனவும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என தெரிந்தே அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்ததாகவும் கூறினார்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என்ற தமிழிசை, வேலைவாய்ப்புகள் குறித்து மாதந்தோறும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என மோடி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் வருவாய்த்துறையினர் சோதனைக்கு பயந்து அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதாக ஸ்டாலின் கூறுவதில் உண்மையில்லை எனவும் தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருவதால் தான் அதிமுகவினர் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

POST COMMENTS VIEW COMMENTS