சென்னையில் ஜிஎஸ்டி தீர்ப்பாய மண்டல மையம் : அமைச்சர் ஜெயக்குமார் 


ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வு சென்னையில் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டியின் 28ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி ஏற்கனவே 28 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்ட நிலையில், அதை 5 சதவிகிதமாக குறைக்க தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த கூட்டத்தில் வரி குறைக்க வலியுறுத்தப்பட்ட கைத்தறி, ஜவ்வரிசி, ஊறுகாய், வெண்ணெய், நெய், விவசாயக் கருவிகள், பம்ப் செட்டுகள், பேக்கரிப் பொருட்கள் ஆகியவை குறித்து மீண்டும் நினைவூட்டப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வு சென்னையில் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS