மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..!


ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.

கடந்த 2016ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுவாசத்தை எளிமைப் படுத்துவதற்கும், சிரமம் இல்லாமல் உணவு உண்பதற்காகவும் அவருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில், தொண்டையில் குழாய் மாற்றுவதற்காக காவிரி மருத்துவமனையில் இன்று கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்ததால் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS