ஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுகவினருக்கு வைகோ அறிவுறுத்தல்


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து மதிமுகவினர் விமர்சிக்க கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மலேசியாவிலிருந்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் குறித்து முகநூலிலோ வாட்சப்பிலோ மற்ற சமூக வலைத்தளங்களிலோ மதிமுகவினர் எவ்வித விமர்சனமும் செய்யக் கூடாது என வைகோ கூறியுள்ளார். அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் மதிமுகவுக்கு பெருங்கேடு செய்பவர்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலை மீறி செயல்படுபவர்கள் மதிமுகவின் ஆதரவாளர்களாகவோ பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கும் மதிமுகவும் எள்ளளவு தொடர்பும் இல்லை என்றும் வைகோ தம் அறிக்கையில் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS