ரஞ்சித்திடம் அரசியல் பேசினேன் ! ராகுல் காந்தி 'டீவிட்'


அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது பா.ரஞ்சித்துடன், நடிகர் கலையரசனும் சென்று ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது " திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலாவை இயக்கியவர். உடன் நடிகர் கலையரசனையும் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படங்கள், சமுதாயம் பற்றி பேசினோம். இந்தச் சந்திப்பும் உரையாடலும் மகிழ்ச்சியளிக்கிறது, இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS