அமித்ஷா தலைமையில் ஆலோசனை தொடங்கியது !


2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எப்படி தமிழகத்தில் எதிர்கொள்வது என்பது குறித்து பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை தலைமையில் 16 உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். பாஜக தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை அமித் ஷா வழங்கி வருகிறார்.

ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா இரவு 9 மணி வரை பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார். கட்சியில் அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்துகிறார். குறிப்பாக வாக்குச் சாவடி பொறுப்பாளர் நிலையில் இருக்கும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார். 

POST COMMENTS VIEW COMMENTS