“எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை இல்லை” சட்டசபையில் எம்.எல்.ஏ பாண்டி பேச்சு


சட்டசபையில் பேசிய முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்எல்ஏ பாண்டி, எம்எல்ஏக்களுக்கு எங்கு சென்றாலும் மரியாதை இல்லை, அவர்களுக்கு தனி அதிகாரம் வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் படிக்காதவன்தான். ஆனால் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி நடத்துகிறேன். இதில் சம்பாதிக்க முடியாது. கல்விதான் முக்கியம்” என்று கூறினார். சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 2 கோடி ரூபாயில் இருந்து 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                                                              

அதேபோல், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் ஒரு உதவியாளரை நியமிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் ராமு வலியுறுத்தினார். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துகிறோம். அதனால் நிதியை உயர்த்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் சில உரையாடல்கள்:-

1. துணை முதல்வர் ஓபிஎஸ் : லோக் ஆயுக்தா விரைவில் தாக்கல் செய்யப்படும். 

   சேகர்பாபு(திமுக)                   : எப்பொழுது தாக்கல் செய்யப்படும்?

  அமைச்சர் ஜெயக்குமார்     : இந்தக் கூட்டத்தொடருக்குள் தாக்கல் செய்யப்படும்.


2. தனியரசு                       : ரேசனில் அரசி வேண்டாம் என்பவர்களுக்கு பணமாக கொடுக்க வேண்டும்.

    அமைச்சர் காமராஜ்      : இது நடைமுறைக்கு சாத்தியமில்லை, அரசி மட்டுமே வழங்கப்படும். 


3. அமைச்சர் செங்கோட்டையன் : தனியார் பள்ளிகள் வேலை நேரத்தில் நீட் பயிற்சி வழங்கினால் அவர்களது அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

   அமைச்சர் செங்கோட்டையன்   : ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் சிபிஎஸ்சி பள்ளிகள் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் 

POST COMMENTS VIEW COMMENTS