“எம்எல்ஏவாக இருந்து பாருங்கள்..அப்போ எங்க கஷ்டம் தெரியும்” - சட்டசபையில் பொங்கிய கே.என்.நேரு


எம்எல்ஏவாக இருப்பது எவ்வளவு சிரமம் என்று இருந்து பார்த்தால் தான் தெரியும் என்று கே.என்.நேரு பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

கடந்த சில தினங்களாக சட்டசபையில் பல்வேறு கலகலப்பான உரையாடல்கள் நடக்கின்றன. ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்த்து சட்டசபையையே கலகலப்பாக மாற்றி வருகிறார்கள். வழக்கமான கலாட்டாக்கள் நிறைந்த சட்டசபை போல் அல்லாமல் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு எம்.எல்.ஏக்கள் சம்பளம் குறித்து சட்டசபையில் பேசியது எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டது. கேஎன்.நேரு பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வை பொதுமக்களும் பத்திரிகைகளும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பது எளிதானதல்ல. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது. 

கிரிக்கெட், சடுகுடு , கல்யாணம் என எங்களது செலவை பட்டியலிடலாம். தொகுதி பிரச்சனைகள், திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் பேன்றவற்றிக்கு உறுப்பினர்களுக்கு ஆகும் செலவுக்கான ரசீதுகளை சமர்ப்பிக்கிறோம். எங்களுக்கு சம்பளம் வேண்டாம் அந்த பில்லை அரசு ஏற்றாலே போதும். எம்எல்ஏ'வாக இருப்பது எவ்வளவு சிரமம் என்று இருந்து பார்த்தால் தான் தெரியும்” என்றார்.

     

பின்னர் மீண்டும் பேசிய கே.என்.நேரு, “தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் ;அதனால், தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டே போனால், எங்களக்கு தான் கஷ்டம் அதனால் தான் கவலைப்படுகிறோம்” என்று கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS