தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்துவோம்: முதலமைச்சர் பழனிசாமி


தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற காவிரி ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாளை நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக புதிய தலைமுறையில் பிரத்யேக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற காவிரி ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அந்த தகவலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அமல்படுத்த தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS