சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பது பிடித்திருக்கிறது - பிரதமர் மோடி


சர்வதேச சமூகவலைதள தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “சமூக வலைதள தின வாழ்த்துகள். ஜனநாயகப்பூர்வமான உரையாடல்களில் புதிய ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. சமூகவலைதளங்களில் ஜனநாயகப்பூர்வமான உரையாடல்கள் இருக்கின்றன. இருப்பினும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

குறிப்பாக சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் இளைய தலைமுறை நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் முறை மிகவும் பிடித்திருக்கிறது. இளைஞர்கள் தொடர்ந்து தங்களது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 


 

POST COMMENTS VIEW COMMENTS