நான் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் ! துரைமுருகன் கலகல 


 

நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் என திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் பேரவையில் பேசினார்.

திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் துரை முருகன் இயல்பாகவே நகைச்சுவையுடன் பேசக் கூடியவர். இவரது பல பேச்சுகளால் பேரவையில் சிரிப்பலைகளை எழும். சட்டப்பேரவையில் இன்று பேசிய துரைமுருகன்,   கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அப்போது பல கிராமிய பாடல்களையும்  அவர் பாடிக் காட்டினார். இடையில் குறுக்கிட்ட சபாநாயகர்,  அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்று  துரைமுருகனை பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்கு நான் சிறுவயதில் பல நாடகங்களில்  நடித்துள்ளதாக குறிப்பிட்டார். ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடக மேடை இங்கு அனைவரும் நடித்து கொண்டு இருக்கிறோம். சபாநாயகர் ஆகிய நீங்களும்  நடித்துக் கொண்டு தான் இருப்பதாக தெரிவித்தார்.இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. 

அப்போது பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த  2001 ஆம் ஆண்டு அவையில் பேசும் போது துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக அவர் பாராட்டியதை சுட்டுக்காட்டினார்.  இதற்கு பதிலளித்த  துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடித்திருக்க தனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கும், சிவாஜி கணேசன் போன்று ஆகிருப்பேன் என்றார். இதை கேட்ட திமுக அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி சிரித்தனர்.

 

 

 


 

POST COMMENTS VIEW COMMENTS