மதவெறி நாட்டுக்கே ஆபத்து: ஓபிஎஸ் காட்டம்


தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மதவெறி நாட்டுக்கே ஆபத்து என்றார். மேலும் தாங்கள் ஒருபோதும் திராவிடத்தை விடவில்லை என்றும் கூறினார்.

தமிழக சட்டபேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் அறிவித்த திட்டங்களின் நிலை மற்றும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 2016ம் ஆண்டு முதல் எத்தனை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தவை எவை..? அதனின் தற்போதையை நிலைமை என்ன? மற்றும் எடப்பாடி அறிவித்தது, அதனின் நிலை என்ன என்று பட்டியிலிட்டு பதில் அளித்தார். முதல்வரின் பதிலை அடுத்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் முதல்வர், நீங்கள் அறிவித்த திட்டங்கள், அதன் நிலை எல்லாம் சொன்ன நீங்கள் இடையில் ஒருவர் முதல்வராக (ஓபிஎஸ்) இருந்தாரே அவரை மறந்துவிட்டீர்களே என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் “எங்களது ஒற்றுமையை பார்த்து அண்ணனுக்கு கண் உறுத்துகிறதா? யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம்” என்றார். இதனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிரித்து கொண்டே மேஜையை தட்டி வரவேற்றனர்.

இதுபோல, சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், “ இது திராவிட மண்; மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது” என தெரிவித்தார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓபிஸ், மதவெறி நாட்டுக்கே கேடு; நாங்கள் ஒருபோதும் திராவிடத்தை விடவில்லை என தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS