துரைமுருகன் பேச்சால் சிரிப்பலையில் மிதந்த தமிழக சட்டப்பேரவை


இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை நிலவியது.

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தனியார் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் நாட்டுப்புறப் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துரைமுருகன் நாட்டுப்புற பாடல்களை மட்டும் பார்ப்பாரா..? இல்லை மிட் நைட் மசாலா பார்ப்பாரா..? என கேள்வி எழுப்பினார். இதற்கு, ஜெயக்குமார் பார்ப்பதையெல்லாம் தான் செய்வதில்லை என்று துரைமுருகன் உடனடியாக பதில் அளித்தார். இதனால் சிறிது நேரம் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

POST COMMENTS VIEW COMMENTS