அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: பேரவையில் தீர்மானம் ‌நிறைவேற்றம்


மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரி பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்தார். ஒருமித்த கருத்து ஏற்படும் வரை மசோதா நிறைவேற்றும் பணிகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் உள்ளன எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கொண்டுவந்த அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து கட்சிகளும் முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

 

POST COMMENTS VIEW COMMENTS