நேரடி அரசியலில் ஈடுபட முயல்கிறார் ஆளுநர்: மு.க.ஸ்டாலின்


ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு முரணாக நேரடி அரசியல் செய்ய முயன்றிருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கோ, வேந்தர் என்ற முறையில் அவர் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ திமுக எதிர்ப்பு காட்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரிகளை கூட்டி நடத்தும் ஆய்வுகளைத் தான் திமுக எதிர்ப்பதாகவும் தெரிவித்துளளார். எதிர்ப்பின் அடையாளமாக அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின்படி கருப்புக் கொடியை திமுக காட்டுகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் இதுவரை அரசின் எந்த துறையையும் விமர்சித்தது இல்லை என ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் மாதந்தோறும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைக்காகவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்வரும் மாதங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS