விவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி


சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஓமலூரில் உள்ள சேலம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்றார். அங்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், தொகுதி வாரியாக பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் விவசாயிகள் ஏராளமானோர் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தனித்தனியாக ஒவ்வொரிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் - சென்னை அதிவிரைவுச் சாலைக்கான எல்லைக் கற்கள் நடும் பணி நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS