“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ 


ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் விஜய் அரசியலை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஞானஒளிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது,  அதில் கலந்துக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்ததில் பலர் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க மத்திய, மாநில அரசின் ஏற்பட்டினால்தான் மதுரைக்கு எய்ம்ஸ் கிடைத்துள்ளது என்றார்.  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மதுரையில் அமைய வேண்டும் என நினைத்தர். அதேபோல் எய்ம்ஸ் அமைய அவர்கள் கேட்ட அனைத்து வசதியும் மதுரையில் உள்ளது. அதனால்தான் மதுரைக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.  மேலும் எண்ணெய் குழாய் அந்த இடத்தின் அருகே போவதனால் எந்தப் பிரச்சனை இல்லை என்று அதிகாரப்பூர்வகமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய் இருப்பதனால் எந்தப் பாதிப்பும் வராது என்றார். 

                        

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என பலரும் கருத்துகளை முன் வைக்கிறார்கள். அது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், நாலு படம் ஓடினாலே முதல்வர் என போஸ்டர் ஒட்டுவர்கள். விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் மக்கள்தான் முடிவேடுக்க வேண்டும் என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS