“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பின்னர் பேசிய அவர், “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு, ஆனால் தமிழக அரசியல் குறித்து பேசினோம்” என்று கூறினார். 

இந்தச் சந்திப்பு குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் உடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இரு கட்சிகளின் நிலைப்பாடு, விவகாரங்கள் குறித்தும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாகவும் தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

                   

இந்நிலையில், ராகுலின் ட்விட்டர் பதிவுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், நேரம் ஒதுக்கி தம்மை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

                                

POST COMMENTS VIEW COMMENTS