இன்று மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி


அதிமுக சார்பில் நடைபெறும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை செல்கிறார். இதற்காக சின்னக்கடை வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டு எடுத்தது குறித்து முதலமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக காலை 11 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் மயிலாடுதுறை காவிரி இல்லத்திற்கு செல்லும் அவர், மாலை 5 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூலு தலைமையில் 7 எஸ்.பிக்கள், 10 ஏ.டி.எஸ்.பி, 25 டிஎஸ்பி, 76 இன்ஸ்பெக்டர்கள் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS