மு.க.தமிழரசு இல்லத்திற்கு சென்றார் கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி தனது மகன் தமிழரசு இல்லத்திற்கு சென்றார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வில் இருக்கும் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடி கூட சென்னை வந்திருந்த போது கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்தார். 

இந்நிலையில், கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் மு.க.தமிழரசு வீட்டுக்கு கருணாநிதி சென்றார். 

முன்னதாக, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் கருணாநிதி வீட்டை விட்டு வெளியே அவ்வவ்போது சென்று வருகிறார். ‘முரசொலி’ அலுவலகம், அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களுக்கு கருணாநிதி திடீரென சென்று பார்த்தார்.

POST COMMENTS VIEW COMMENTS