டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி ?: மு.க.ஸ்டாலின்


குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி.என்.பி.எஸ்.சி-யின் 2016ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியான செய்தியால் அதிர்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்யாமல் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்த அவர், இவை எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் மாபெரும் துரோகச் செயல் என்றும் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி-யால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் தனியார் பயிற்சி மையத்திற்கு கிடைத்தது எப்படி என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, இதில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், தனியார் பயிற்சி மையத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS