காவிரி விவகாரம்: முதலமைச்சர் இன்று ஆலோசனை


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்தக் காலக்கெடுவின் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..? என்பது குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் ஈடுபடலாம் எனத் தெரிகிறது. உச்சநீதிமன்ற விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS