சென்னையில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு


நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் 8ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்ததோடு கட்சிப் பெயரையும் அறிவித்தார். அந்த மேடையிலேயே கட்சி நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் சிநேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் 8ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதிமய்யம் கட்சி உருவான பின் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக் கூட்டம் நடத்தவும் மக்கள் நீதி மய்யம் முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS