அட்ராசக்க.. இந்தவாரம் நல்ல ஷாப்பிங் தான் ...


சம்பளத்திற்காக நாம் அனைவருமே மாதத்தின் முதல்நாளை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். சம்பளம் வாங்கின முதல் நாள் நாம் செலவு செய்வது ஆடைகளுக்காக தான் இருக்கும். அவற்றை எவ்விதம் தேர்வு செய்யலாம் என்பதை கீழே பார்ப்போம்.

முதலில் நீங்கள் தேர்வு செய்யும் ஆடை உங்கள் உடல் வாகுக்கு பொருந்துமா என்பதை அணிந்து பாருங்கள்.

முக்கியமாக இடுப்பு, மார்பு , தோள்பட்டை அளவுகளை சரிபார்க்க வேண்டும் .

காட்டன், சில்க், கம்பளி ஆடைகள் மற்ற சிந்தடிக் ஆடைகளை விட அதிக நாட்கள் உழைக்கும் அவற்றை பருவநிலைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கினால் நல்லது.

பெரும்பாலான ஆடைகளில் தையல் சரியாக இருக்காது. அவற்றை கவனியுங்கள் .

சில ஆடைகளில் கைகளுக்கு எக்ஸ்ட்ரா துணி இருக்காது . அவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்

ஆடையின் நிறத்தை கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்காமல் வாங்கும் சில ஆடைகள் ஒரு சில முறை துவைத்தவுடனேயே நிறம் மங்கிவிடும்.

பட்டன்கள், பாக்கெட்டுகள் முறையாக பொருந்தி உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள் .

இறுதியாக நீங்கள் தேர்வு செய்த ஆடைக்கு ஏற்ற பணம் கொடுத்து வாங்குங்கள் . அதிக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் .

POST COMMENTS VIEW COMMENTS