இடுக்கியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை


கன மழையால் இடுக்கி மாவட்டத்தில் நாளையும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என ஆட்சியர் உத்தரவு.

தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாவது நாளாக நாளையும் (ஜூன் 12ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார். 

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் இந்தப் பருவ மழை இடைவிடாது கன மழையாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்யும் கன மழையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்கள் விழுவதும், மண் சரிவும் ஏற்பட்டும் வருகிறது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே இன்று (ஜூன் 11ம் தேதி) விடுமுறை அளிக்கப்படிருந்தது. இந்நிலையில் கன மழை தொடர்வதால் இரண்டாவது நாளாக நாளையும் (ஜூன் 12ம் தேதி) இடுக்கி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து  ஆட்சியர் கோகுல் உத்தரவிட்டுள்ளார், 
 

POST COMMENTS VIEW COMMENTS