திருப்பதி பிரம்மோற்சவம் : விமர்சையாக நடந்த அங்குரார்ப்பணம்


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம் நடைபெற்றது.

கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை  நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்தி தயார்களுடன் எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணம் நடைபெற்றது. சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனதிபதியை கோயில் அர்ச்சகர்கள், ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழுங்க கொண்டு சென்றனர்.

அங்குள்ள சுத்தமான பகுதியில் மண் எடுக்கப்பட்டு, கோயிலில் உள்ள யாக சாலையில் 9 பானைகளில் வைத்து நவதானிங்கள் செலுத்தி முளைகட்டும் விதமாக பூஜை செய்யப்பட்டது.

இந்த அங்குரார்பணத்திற்கு நவதானியங்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படவுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS