தூய்மையே சிறந்த சேவை: பிரதமர் மோடி


மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி புதிய தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 15ஆம் தேதி முதல் தூய்மையே உண்மையான சேவை என்ற புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மகாத்மா காந்திக்கு நாம் மரியாதை செலுத்துவதற்கான மிகப்பெரிய வழிதான், தூய்மையே உண்மையான சேவை எனும் இயக்கம் என்றும் மோடி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS