‘கன்னியாஸ்திரியை பிஷப் வன்கொடுமைக்கு ஆளாக்கியது உண்மையே’: காவல்துறை


கன்னியாஸ்திரியை பிஷப் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது உண்மையே என கேரள காவல்துறையின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப்புக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நாளை நடக்க உள்ள விசாரணையில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாண பத்திரத்தை கேரள காவல் துறையினர் இறுதி செய்துள்ளனர். அதில், கன்னியாஸ்திரியை பிஷப் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

இக்கூட்டத்திற்குப் பின் பேசிய அதிகாரி ஒருவர், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிஷப் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கோரி கேரளாவில் சில கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன.

முன்னதாக இவ்விவகாரத்தை மூடிமறைக்க பிஷப் பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவதாகவும் இவ்விவகாரத்தில் தனக்கு நீதி பெற்றுத் தர உதவ வேண்டும் என்றும் வாடிகனில் உள்ள கத்தோலிக்க சபைக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதியிருந்தார். அதே சமயம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிஷப் ஃப்ராங்க்கோ முல்லக்கல், தன் மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். பிஷப்புக்கு எதிரான வழக்கை சீர்குலைக்க முயல்வதாக கேரள அரசு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அம்மாநில அமைச்சர் ஜெயராஜன் மறுத்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS