அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு


உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலுக்கு அடியிலும், வெளியிலும் ஆபத்தான மு‌றையில் தொங்கியபடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஹர்தோய் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோதே, படிக்கட்டு வழியாக பெட்டியின் அடிப்பகுதிக்குச் சென்ற அந்த இளைஞன் அங்கே தொங்கியபடி நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்தான். பின்னர் பெட்டிக்கு வெளியே தொங்கியபடியே சென்று கொண்டிருந்தான். இதை மற்றொருவர் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கிறார். ஏற்கெனவே அந்த இளைஞன் மீது திருட்டு உள்ளிட்ட புகார்கள் இருப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read Also -> ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

POST COMMENTS VIEW COMMENTS