சிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா?


தெலங்கானாவில் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் அண்மையில் சிறந்த ஓட்டுனருக்கான மாநில விருதை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது.

ஜகிதியால் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பேருந்தை ஸ்ரீனிவாஸ் என்பவர் ஓட்டிவந்தார். 30 வருடம் அனுபவம் பெற்ற மூத்த பேருந்து ஓட்டுனரான இவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தெலங்கானா மாநில அரசு பேருந்து கழகம் சார்பில் பேருந்து பாதுகாப்புக்கான சிறந்த ஓட்டுனர் விருதை பெற்றுள்ளார். 

Read Also -> அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் ‌விபரீத விளையாட்டு

Read Also ->  தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ் 

பேருந்து விபத்து ஏற்பட்ட தினத்தில் உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக உயர் அதிகாரிகளிடன் ஸ்ரீனிவாஸ்-ன் விடுமுறை விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஸ்ரீனிவாஸின் கால்கள் இரண்டும் நசுங்கின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS