ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார்


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக வரும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Read Also -> வங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை  

ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. 9 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 17 ஆம் தேதி நடைபெறயுள்ளது. பிரம்மோற்சவத்திற்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Read Also -> ஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல்

மேலும் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 650 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கோவிலின் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல் தெரிவித்துள்ளார். பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS