நடனம் மூலம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்


புவனேஸ்வரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்த காவலர் ஒருவர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். 

ஓடிசா தலைநகர் புவனேஷ்வரில் 33 வயதான பிரதாப் சந்திரா ‌கந்தவால் என்பவர், ஊர்காவல் படையில் பணிபுரிந்து தற்போது போக்குவரத்து காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனித்துவமான முறையில் நடனம் மூலம் விதிமுறைகளை மக்களுக்கு தெரிவித்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகிறார். இதனால் பிரதாப், பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆரம்பத்தில், பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டதால், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என தெரிவித்தார்.
 

POST COMMENTS VIEW COMMENTS