மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு


தெலங்கானா மாநிலத்தில் மலைப்பாதையில் பேருந்து உருண்டு விழுந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் கொண்டக்கட்டு என்ற இடத்தில் இருந்து ஜக்தியால் என்ற இடத்திற்கு 40 பேருடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, ஷனிவாராபேட் கிராமத்தில் வந்தபோது பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இதில், பேருந்தில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உயிரிழப்ப மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS