நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு


டெல்லியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி விபத்திற்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதி நடைபாதையில் அங்குள்ள நடைபாதைவாசிகள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கார் ஒன்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Read Also -> ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..?

Read Also -> ஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..! 

இதனிடையே இந்த விபத்து தொடர்பாக தேவேஷ் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான இவர் அங்குள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மேலும் கார் ஓட்டிவந்த போது அவர் குடிபோதையில் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட மயக்க நிலையில் இருந்த அவர் நண்பரை சந்திக்க காரை ஓட்டிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேவேஷ் மீது ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS