சசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் கவலைப்படவில்லை: ஐஜி ரூபா


சசிகலா குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும் என்று பலர் எச்சரித்தும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் பரப்பன அஹ்ரஹாரா சிறையில் நடைபெற்ற விதிமீறல் குறித்து வெளிப்படுத்தியதாக கர்நாடக மாநில ஐஜி ரூபா கூறியுள்ளார்.

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற விதிமீறலை வெளிப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, இதில் பங்கேற்று நேர்மையான அரசு ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

  

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரூபா, பெங்களூரு சிறை விவகாரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய பணியை நேர்மையாக செய்ததாக கூறினார். தற்போது சிறையின் நிலவரம் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். சசிகலா விதிமீறல் அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரியும் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். சிறை விவகாரம் தொடர்பாக எந்தவித மிரட்டலும் வரவில்லை என்றும் ஐஜி ரூபா கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS