தெலங்கானாவில் செப்.15-ல் பரப்புரையை தொடங்குகிறார் அமித் ஷா


தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரும் 15-ம் தேதி முதல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

மெஹபூப் நகரில் நடக்கும் பரப்புரை கூட்டத்தில் அமித் ஷாவுடன் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநில பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு வரை உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பேரவையை முன் கூட்டியே கலைத்துள்ளார். இதனால் இந்தாண்டு இறுதியிலேயே அம்மாநிலத்திற்கு தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS